Sunday, February 20, 2011

மாநபியே துயரின் மாமருந்தே...(புதிய இஸ்லாமிய கீதம்)




பாடலாசிரியர்: கவிஞர் பொத்துவில் கவிஞர் அஸ்மின்  
பாடகி:ஷைபா பேகம்( இலண்டன்)
 
பல்லவி

மாநபியே.. மாநபியே...
மாநபியே துயரின் மாமருந்தே..
மறையளித்த உலகின் தேன்கரும்பே....
(மாநபியே..)

உயர்தீனின் பூரணமே...
உண்மை ஒளிரும் தோரணமே
இறைமறையை நாங்கள் பெற
நபி நீங்கள் காரணமே...!
மக்கள் அறியாமை விட்டுத் தெளிவாக
வழிகாட்டிய ஒளிதானே...

(மாநபியே..)

சரணம்-1

மக்கா நகர் காபிர்கள்
சிக்கல்பல செய்தாலும்
பக்குவமாய் நீர் இருந்து
பாவிகளை பொறுத்தீரே..
தக்கபடி நாம் வாழ
அக்கறையாய் இருந்தீரே
திக்கு எட்டும் தீனை நட்டு
தீமைகளை அறுத்தீரே...

எதிர்காலம் நிகழ்காலம்
கூறும் இறைவேதம்
தந்த தூதரே நபிநாதரே...
என்றும் உங்கள் வழிநடப்போம்
 (மாநபியே..)                                                                     

சரணம்-2

எல்லாம் வல்ல இறையோனை
எங்கும் உள்ள மறையோனை
அல்லாஹ்வினை மட்டும் நாங்கள்
அடிபணியச் சொன்னீரே...
ஒன்றுமில்லா எளியோரை
ஒதுக்கவேண்டாம் என்றீரே
வறுமை வந்து வதைத்த போதும்
பொறுமையுடன் நின்றீரே...

மார்க்கம் இறை மார்க்கம்
மீட்கும் கரை சேர்க்கும்
நேர்வழி என்றும் செல்கிறோம்
உங்கள் நிழலில் நாமிருப்போம்...

No comments:

Post a Comment